மன்னார்-மதவாச்சி பிரதான வீதியில் விபத்து

Date:

மன்னார் மதவாச்சி பிரதான வீதி,முருங்கன் பொலிஸ் பிரிவில் உள்ள இசைமாலைத்தாழ்வு பகுதியில் இன்று சனிக்கிழமை மாலை சிறிய ரக மகிழுந்து விபத்திற்கு உள்ளாகியதில் அதன் சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மன்னாரில் இருந்து மாதவாச்சி நோக்கி சென்று கொண்டிருந்த குறித்த சிறிய ரக மகிழுந்து இசைமாலைத்தாழ்வு பகுதியில் விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
குறித்த வாகனத்தை செலுத்தி வந்த சாரதிக்கு  நித்திரை தூக்கம் ஏற்பட்டமையினால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
குறித்த பகுதியில் பிரதான வீதியின்  இடது பக்கமுள்ள மரமொன்றுடன் மோதி தொடர்ந்து மற்றுமொரு பெரிய மரத்தில் மோதி மகிழுந்து நின்றுள்ளதாக விபத்தை நேரடியாக பார்த்த அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த விபத்தில் காயமடைந்த சாரதி மீட்கப்பட்டு மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-விபத்து தொடர்பாக மேலதிக விசாரனைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் நிருபர்

Popular

More like this
Related

புதுப்பிக்கப்படும் அஸ்வெசும தகவல்கள்!

அஸ்வெசும வருடாந்த தகவல்களை புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி சபை தெரிவித்துள்ளது. 2023ம்...

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் இன்று ஆரம்பம்.

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் இன்று திங்கட்கிழமை (10) ஆரம்பமாகி,...

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (10) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த துருக்கி

காசாவில் நடத்திய போருக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமைச்சர்கள் மற்றும்...