மாற்று மதத்தவர்களையும் கவர்ந்த ரமலான் | நோன்பு நோற்ற டேவிட் வோனர், கேன் வில்லியம்சன்

Date:

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீட் கானுடன் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வோனர் மற்றும் நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் ஆகியோர் நோன்பு நோற்றுள்ளனர்.

ரமழான் மாதம் ஆரம்பித்துள்ள நிலையில், தற்போது இடம்பெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரின் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடி வரும் வீரர்களான ரஷீட் கான், முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டோர் நோன்பு நோற்று வருகின்றனர்.

இந்நிலையில், அவர்களுடன் இணைந்து சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவரான டேவிட் வோனர் மற்றும் நியூஸிலாந்து தேசிய கிரிக்கெட் அணியின் தலைவரான கேன் வில்லியம்சன் ஆகியோர் நேற்றையதினம் நோன்பு நோற்றுள்ளனர்.

குறித்த மூவரும் நோன்பு திறப்பதற்காக காத்திருக்கும் வேளையில் எடுத்த வீடியோ ஒன்றை ரஷீட் கான் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் (Story) வெளியிட்டுள்ளார்.

உங்கள் அனுபவத்தை பகிருங்கள் என ரஷீட் கான் கோருகிறார்.

அதற்கு, டேவிட் வோனர் “நல்லம். ஆனால் எனக்கு மிகவும் தாகமாகவும், அதிக பசியாகவும் உள்ளது. எனது வாய் காய்ந்து போயுள்ளது. மிகவும் கஷ்டமான விடயம்” எனத் தெரிவிக்கிறார்.

“மிகவும் நல்லம். நன்றி” என கேன் வில்லியம்ஸன் தெரிவிக்கிறார்.

இதன் போது, இரு ஜாம்பவான்களும் எங்களுடன் இன்று நோன்பு நோற்றுள்ளனர். இந்த மேசையில் உங்களுடன் இணைந்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என ரஷீட் கான் தெரிவிக்கிறார்.

தற்போது இடம்பெற்று வரும் IPL தொடரில், சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணி விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

6 நாட்களில் ஒரு பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டிய இலங்கை போக்குவரத்துச் சபை

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட விசேட பேருந்து...

107 வயது வரை வாழ்ந்த மூதாட்டி ஹஸீனா உம்மா காலமானார்!

தென் மாகாணத்தின் பெலிகம, கடையவத்த பகுதியைச் சேர்ந்த ஹஸீனா உம்மா என்ற...

எழுத்தாளர் தி. ஞானசேகரன் மறைவுக்கு தெல்தோட்டை ஊடக மன்றம் ஆழ்ந்த இரங்கல்

பிரபல விருது பெற்ற எழுத்தாளர் தி. ஞானசேகரன் மறைவுக்கு தெல்தோட்டை ஊடக...

தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் குர்ஆன் மத்ரஸாவின் 25ம் ஆண்டு நிறைவு விழா

தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் மத்ரஸாவின் முகாமைத்துவ குழு அங்கத்தவர்கள்,...