மன்னார் மாவட்டத்தில் 2 ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

Date:

மன்னார் மாவட்டத்தில் உள்ள சுகாதார பணியாளர்களுக்கு 2ஆம்  கட்ட கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமாகி தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் இடம் பெற்று வருகின்றது.
மாவட்ட ரீதியில் முதலாவது கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட சுகாதார முன் கள பணியாளர்களுக்கு மேற்படி 2 ஆம் கட்ட தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம் பெற்றது.
குறிப்பாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் மாவட்ட பொது வைத்திய சாலையில் பிரதான தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கைகையும் தலைமன்னார் எருக்கலம்பிட்டி ,அடம்பன் , முசலி பகுதிகளிலும் பிரதேச ரீதியாக தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம் பெற்று வருகின்றது.
அத்துடன் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட சுகாதார பணியாளர்களுக்கான மருத்துவ ஆலோசனை அடங்கிய துண்டு பிரதிகள் மற்றும் கையேடுகளும் வழங்கப்பட்டது.
இன்று வியாழக்கிழமை தொடக்கம் எதிர் வரும் மூன்று தினங்களுக்கு குறித்த 2 ஆம் கட்ட   தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கை இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நிருபர்

Popular

More like this
Related

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...