சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்-மனநல விசேட வைத்தியர் ரூமி ரூபன் தெரிவிப்பு!

Date:

சிறுவர்கள் கையடக்கத் தொலைபேசி அல்லது கணனியின் காட்சி திரையை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருப்பதால் கண் மற்றும் மனநிலை பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம் என்று கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் மனநல விசேட வைத்தியர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் தொடர்ச்சியாக அல்லது இடைவெளிவிட்டு இதனைப் பயன்படுத்துவதனால், இதனால் ஏற்படுகின்ற பாதிப்புகளை குறைத்துக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் கையடக்க தொலைபேசி மற்றும் கணணியை தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதனால், நீண்டகால தலைவலி மற்றும் தலைச்சுற்றல் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளதாகவும் மனநல வைத்தியர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த நாட்களில் குழந்தைகள் வீட்டினுள்ளேயே சிக்கி இருப்பதனால் அவர்கள் கணனிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். எனவே இது தொடர்பாக பெற்றோர் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பொத்துவில் பாடசாலைக்கு பாகிஸ்தான் தூதுவர் விஜயம்: மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு!

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டொக்டர் நய்யார் நசீர்...

கனமழையால் 35 இடங்களில் நிலச்சரிவு : 6 மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’!

நாட்டில் நிலவும் பலத்த மழைவீழ்ச்சி காரணமாக இதுவரை சுமார் 35 சிறிய...

முஸ்லிம் காங்கிரஸின் புதிய தேசியப் பட்டியல் எம்.பி.யாக ஹபீப் றிபான் நியமனம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக ஓட்டமாவடியைச்...

ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தனவின் ‘அம்புலுவாவ: ஆதிக்கத்தை வென்ற சுயாதீனம்’ நூல் வெளியீடு செப்டம்பர் 23 இல்!

"அம்புலுவாவ: ஆதிக்கத்தை வென்ற சுயாதீனம்" (අම්බුළුවාව - පර ආධිපත්‍යය පැරදවූ...