டாடர்ஸ்தானின் தலைநகரான கசானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 7 மாணவர்களும் 1ஆசிரியரும் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கசான் தலைநகரின் குடியரசுத் ஆளுநர் ருஸ்தம் மின்னிகனோவ் இன்று (11) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நான்கு ஆண் மற்றும் மூன்று பெண் மாணவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
பிராந்திய சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, மேலும் 18 குழந்தைகள் உட்பட 21 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆறு பேர் தீவிர சிகிச்சையில் இருப்பதாக கூறப்படுகிறது.மேலும் எண்ணிக்கை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.