மூன்று நாட்கள் முழுமையான பயணக் கட்டுப்பாடுகளின் போது அடையாள அட்டை முறையைப் பயன்படுத்தி பயணிக்க அனுமதி இல்லை என போலீஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹானா தெரிவித்தார்.
இன்று இரவு 11 மணி முதல் அடுத்த திங்கட்கிழமை (17) அதிகாலை 4 மணி வரை அனைத்து விதமான பயணங்களும முழுமையாக தடை செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த காலகட்டத்தில் கடைகள் திறக்கப்படுவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அத்தியாவசிய சேவைகளை மட்டுமே செயல்படுத்த முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஊடகங்களுக்கு செய்தித் தொடர்பாளர் மருத்துவமனைகளுக்குச் சென்று மருத்துவ சிகிச்சைக்கான மருந்துகளைப் பெற முடியும் என்று வலியுறுத்தினார்.