காஸாவில் முழு அளவிலான யுத்தம் மூளும் ஆபத்து

Date:

இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பலஸ்தீனத்தின் காஸா பிரதேச த்தில் எந்த நேரத்திலும் முழு அளவிலான யுத்தம் வெடிக்கலாம் என்ற அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.

காஸா பிரதேசத்தில் கடந்த பல தினங்களாக தாக்குதல்களும் பதில் தாக்குதல்களும் தொடர்ந்து வருகின்ற நிலையில் எந்த நேரத்திலும் அங்கு இரு தரப்புக்கும் இடையில் முழு அளவிலான யுத்தமொன்று வெடிக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இன்று காலை கிடைத்துள்ள சில தகவல்களின் படி காஸாவை இஸ்ரேலிய ராணுவம் தரை வழியாக சுற்றிவளைத்து உள்ளது.

அதேநேரம் விமானப்படை வான்வழியாக தாக்குதலை தொடங்கியுள்ளது. ஹமாஸ் ஆயுத குழுவும் பதிலுக்கு இஸ்ரேலை நோக்கி ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இஸ்ரேலின் பிரதான அணுவுலை ஒன்றை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தமுறை முன்னரைப் போல் அன்றி இஸ்ரேலுக்கு சற்று பலத்த அடி விழுந்து வருவதாகவே அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன போராளிகளை சந்திப்பது ஒருபுறமிருக்க இஸ்ரேல் அல் அக்ஸாவில் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக இஸ்ரேலுக்குள்ளேயே அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது வீதிகளில் இஸ்ரேலிய யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையிலான மோதல்கள் வெடித்துள்ளன.

ஆத்திரமடைந்தசில மக்கள் இஸ்ரேலிய போலீசாரை நோக்கி தாக்குதல்களை தொடங்கியுள்ளனர். உள்ளூரில் மக்களுக்கு இடையில் மோதல்கள் வலுவடைந்து வருகின்றன. எனவே ஒருபுறம் எல்லையில் பலஸ்தீனர்களை எதிர்கொண்டுள்ள இஸ்ரேலிய ராணுவம் மறுபுறத்தில் உள் நாட்டில் ஏற்பட்டுள்ள கலவரத்தை அடக்க பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேல் இராணுவம் இன்று காலை அதன் முன்னேற்றத்தை தொடங்கியிருப்பதாகவும் காஸாவை 24 மணி நேரத்துக்குள் தரைமட்டமாக்கி முடிப்பதே தனது திட்டம் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். இதேவேளை பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக துருக்கிய ஜனாதிபதி எர்டோகன் குரல் கொடுத்துள்ளார் அரபு நாடுகளை தன்னோடு இணையுமாறு அவர் கேட்டுள்ளார் ரஷ்யாவுக்கும் அவர் ஒரு அவசர செய்தியை அனுப்பி இருக்கின்றார்.

இஸ்ரேலுக்கு பாடம் புகட்ட வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. இனி மேலும் அவர்களை விட்டு வைக்க முடியாது. என்னுடைய தலைமையில் அரபு நாடுகள் ஒன்றிணைந்தால் நான் அதை பொறுப்பேற்று இஸ்ரேலுக்கு தக்க பாடம் படிப்பிக்க தயாராக இருக்கின்றேன் என்று தனது நாட்டு மக்களுக்கான உரையில் எர்டொகன் தெரிவித்துள்ளார் .

காணொளி

https://www.bbc.com/news/world-middle-east-57094737

Popular

More like this
Related

சமூகத்துக்கு கொடுக்க வேண்டிய மிக உன்னதமான செய்திகள் இக்கண்காட்சி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது; மௌலவியா ஜலீலா ஷஃபீக்!

மாவனல்லையில் இயங்கி வருகின்ற மகளிருக்கான உயர் கல்வி நிறுவனமான ஆயிஷா உயர்...

சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை சார்பில் வெலிகம மத்ரஸதுல் பாரி மாணவன் பங்கேற்பு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சவுதி அரேபியா தூதரகமும் இணைந்து கடந்த...

தேசிய பூங்காக்களை பார்வையிட Online ஊடாக நுழைவுச்சீட்டு

தேசிய பூங்காக்களை பார்வையிடுவதற்காக நேற்று (10) முதல் Online ஊடாக நுழைவுச்சீட்டுகளை...

ஸஹீஹுல் புகாரி ‘கிரந்தத்திற்கு எதிரான நவீன குற்றச்சாட்டுக்களும் பதில்களும்’ நூல் வெளியீட்டு நிகழ்வு!

ஸஹீஹுல் புகாரி 'கிரந்தத்திற்கு எதிரான நவீன குற்றச்சாட்டுக்களும் பதில்களும்'  நூல் வெளியீட்டு...