தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் வௌியிட்டுள்ள அறிக்கை!

Date:

இந்து சமுத்திரத்தின் சுமாத்திரா தீவிற்கு அருகாமையில் கடலுக்கு அடியில் சுமார் 15 ஆயிரம் கிலோ மீற்றர் ஆழத்தில் இன்று (14) மதியம் 12.03 மணி அளவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த மையம் இதனை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், குறித்த நில நடுக்கம் காரணமாக இலங்கைக்கு தற்போது எந்த ஆபத்தும் இல்லை என அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

எனவே இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது அதிகாரம் பெற்ற உள்ளூர், வௌியூர் ஸ்தாபனங்களுடன் கலந்தாலோசித்து வௌியிடப்பட்ட அறிக்கை என அந்த மையம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

அமைச்சர் விஜித ஹேரத் சவூதி பயணம்

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத்...

மாகாண சபைத் தேர்தலை இந்த வருடத்தில் நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு: பாராளுமன்றில் ஜனாதிபதி

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது என்றும் அதற்காக...

2026ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று

2026 ஆம் ஆண்டு வரவு செலவு தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான...

மறுவாழ்வு நிலையங்களாக சிறைச்சாலைகள் மாற்றப்படும்:அமைச்சர் ஹர்ஷன

மறுவாழ்வு மற்றும் மீள் ஒருங்கிணைப்பு நிலையங்களாக சிறைச்சாலைகளை மாற்றுவதற்கு அரசாங்கம் விரிவான...