இஸ்ரேல் தொடர்பாக ஜோ பைடனின் கருத்துகளுக்கு ரவுப் ஹகீம் கண்டனம்!

Date:

இஸ்ரேலின் அடாவடித்தனம் பற்றியும் அது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் கருத்துக்கள் தொடர்பாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“இஸ்ரேலுக்கு தற்காத்துக் கொள்வதற்கான உரிமை உண்டு” என கிளிப்பிள்ளைப் போன்று அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருக்கின்றார். அத்துடன் “இந்தப் பிரச்சினை விரைவிலோ அல்லது பின்னரோ தீரும்” எனவும் தெளிவில்லாமல் எதையோ உளறியிருக்கின்றார். சுதந்திரமான உலக நாடொன்றின் தலைவர் இவ்வாறு பரிதாபமான தொனியில் முணுமுணுப்பார் என நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. இனரீதியான ஒதுக்களைக் கடைப்பிடித்துவரும் இஸ்ரேல் அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற உதவிகளை வழங்குவதை நிறுத்துங்கள்.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு பெரும்பாலும் தூண்டப்படாமலேயே தங்குதடையின்றித் தொடர்கின்றது. ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூஸலத்தில் மனிதப் படுகொலையை நிறுத்த ஐ.நா. சபையும், இஸ்லாமிய நாடுகளின் ஒன்றியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இஸ்ரேலின் மிலேச்சத்தனத்தை திசைத்திருப்புவதற்காக ஹமாஸ் மீது பாரபட்சமான முறையில் பழி சுமத்துவதை ஐக்கிய இராச்சியத்திற்கான பலஸ்தீனத் தூதுவர் தோலுரித்துக் காட்டியுள்ளார். “நோயின் அறிகுறிகளைத் தேடுகின்றீர்களே தவிர, நோய் எங்கேயிருக்கின்றது என்பதைக் காண்கிறீர்கள் இல்லை” என்கிறார் அவர்.

 

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...