தாக்குதல் தொடரும் – இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு..!

Date:

காஸா மீதான தாக்குதல் தொடர்ந்து நடத்தப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு எச்சரித்துள்ள நிலையில், இது குறித்து அவசரமாக ஆலோசிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ராணுவத்திற்கும், பாலஸ்தீன ஹமாஸ் உள்ளிட்ட போராளி குழுக்களுக்கும் இடையேயான மோதல் 7 ஆவது நாளாக நீடிக்கிறது. ஜெருசலேமில் உள்ள மஸ்ஜிதுல் அக்சாவில் இருந்து பாலஸ்தீனியர்களை விரட்டிய இஸ்ரேல் ராணுவத்தின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டெல் அவிவ் மற்றும் பீர்ஷெபா (Beersheba) நகரங்களின் மீது ஹமாஸ் போராளிகள் ராக்கெட்டுகளை வீசினர்.

அதைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் காஸா நிலப்பகுதி மீதி சரமாரியாக வான்வழி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதில் 41 குழந்தைகள் உள்பட பாலஸ்தீனர்கள் 149 பேர் கொல்லப்பட்டனர்.

காஸாவின் முக்கிய கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. பதிலுக்கு ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 10 பேர் கொல்லப்பட்டனர். இன்று காலை காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் வீடு தரைமட்டமாக்கப்பட்டது.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று காலை டெல் அவிவ் நகரை நோக்கி ஹமாசின் ராக்கெட்டுகள் பறந்தன.

இந்த நிலையில் தொலைக்காட்சியில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ, காஸா மீதான தாக்குதல் தொடரும் என கூறினார்.

ஆனால், ஹமாஸ் போலன்றி தாங்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என அவர் பேசினார். இதனிடையே, மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா. ஐ.நா மற்றும் எகிப்து தூதர்கள் நடத்திய பேச்சுவார்த்தைகள் எந்த பலனும் தராத நிலையில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவரசமாக கூடி நிலைமையை பற்றி விவாதிக்க உள்ளது.

இந்த மோதல் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மிகுந்த கவலை தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ, பாலஸ்தீன் அதிபர் முஹம்மது அப்பாஸ் ஆகியோருடன் அவர் தொலை பேசியில் பேசினார். அப்போது ஹமாஸ் தனது தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அவர் முஹம்மது அப்பாசிடம் கேட்டுக் கொண்டார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...