உலக வங்கி அறிக்கையின்படி, உலக வங்கி கடந்த ஆண்டு COVID-19 அவசரகால பதில் மற்றும் சுகாதார அமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 25 பில்லியன் ரூபாய் (128 மில்லியன் அமெரிக்க டாலர்) கடனை அரசாங்கத்திற்கு வழங்கியதாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.
திறைசேரி அறிக்கையின்படி, 2020 இறுதிக்குள் செயல்படுத்தப்படவிருந்த COVID-19 முயற்சிகள் பல இன்னும் செயல்படுத்தப்படும் கட்டத்திலேயே உள்ளன.
மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகளை மேம்படுத்துதல், கோவிட் -19 கண்டறியும் கருவிகளைக் கொண்ட ஆய்வகங்கள் அமைத்தல் மற்றும் தேசிய தொற்று நோய்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட அறைகள் அமைத்தல் ஆகியவை கடந்த ஆண்டு டிசம்பரில் நிறைவடையவிருந்தன என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. எனினும் இவை இன்னும் முடிந்தபாடில்லை.
இதற்கிடையில், கோவிட் -19 தடுப்பூசிகளை வாங்குவதற்கும், நாட்டின் தடுப்பூசி திட்டத்தை வலுப்படுத்த 80.5 மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிக நிதி உதவியை வழங்குவதற்கும் இந்த வாரம் உலக வங்கி அரசாங்கத்துடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.