கொரோனாவை கண்டு பயப்படுவதே எமக்குள்ள பலவீனம் என்கிறார் ஜீவன்!

Date:

பெருந்தோட்ட பகுதிகளில் மூடப்பட்டுள்ள தோட்ட தொழிற்சாலைகளை கொவிட் சிகிச்சை நிலையங்களாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சரும் இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிவேயே அவர் இதனை கூறினார்,

அவர் மேலும் தெரிவித்ததாவது, கொரோனாவை கண்டு பயப்படுவதே எமக்குள்ள பலவீனம். அந்த பயத்தை ஒழித்தால் அதனை கட்டுப்படுத்த முடியும். மறுபக்கத்தில் மலையக மக்கள் உள்ளிட்ட அனைவரும் சுகாதார வழி முறைகளை உரியவாறு கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

தேயிலை தோட்டங்களில் உற்பத்தியை அதிகரித்தால் மாத்திரமே சம்பள உயர்வை வழங்க முடியும். அதற்காக இரண்டு கைகளை மாத்திரம் கொண்டுள்ள தொழிலாளி ஒருவருக்கு முடியுமான அளவே பறிக்க முடியும்.

30 ஆம் திகதி மேலதிக கொழுந்து பறித்தல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகின்றேன்.

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட தொழிலாளி பணிக்கு செல்ல முடியாது. மாகாண சபை தேர்தல் தொடர்பில் அடுத்த மாதமளவில் ஏற்கனவே உள்ள தேர்தல் முறைமைக்கு அமைய ஒரு அறிக்கையை தயார் செய்து சமர்பிக்க எதிர்பார்க்கின்றோம்.

இந்த வருட முடிவுக்குள் அந்த அறிக்கையை சமர்பிக்கவுள்ளோம். அடுத்தது கொரோனாவால் பாதிக்கப்படட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகின்றது. தேசிய வேலை திட்டத்திற்கு அமைய செயற்பட்டு வருகின்றோம்´ என்றார்.

Popular

More like this
Related

முஸ்லிம்களின் உலகத்துக்கு மணிமகுடமாக இருப்பது பலஸ்தீனம்.அதை விட்டுவிடாதீர்கள்”: அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு!

காசாவில் இப்போது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவை முழுமையாகக் கட்டுப்படுத்த...

கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (EASCCA )மாநாட்டு மண்டபம் ஏறாவூரில் திறந்து வைப்பு!

ஏறாவூரில் அமையப் பெற்றுள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் EASCCA மாநாட்டு...

சமூகத்துக்கு கொடுக்க வேண்டிய மிக உன்னதமான செய்திகள் இக்கண்காட்சி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது; மௌலவியா ஜலீலா ஷஃபீக்!

மாவனல்லையில் இயங்கி வருகின்ற மகளிருக்கான உயர் கல்வி நிறுவனமான ஆயிஷா உயர்...

சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை சார்பில் வெலிகம மத்ரஸதுல் பாரி மாணவன் பங்கேற்பு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சவுதி அரேபியா தூதரகமும் இணைந்து கடந்த...