நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான கடுமையான உடல்நலம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் கீழ் வெளிநாடுகளில் இருந்து வரும் யாத்ரீகர்கள் இந்த ஆண்டு ஹஜ் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என பிரதான பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
யாத்ரீகர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்காக இந்த ஆண்டு ஹஜ் அனைத்து சுகாதார, பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளுடன் மே 9 ஆம் திகதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சின் முடிவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், சவூதி அரேபியாவில் உள்ள சுகாதார நிறுவனங்கள் தொடர்ந்து நிலைமையை மதிப்பிடுவதோடு, அனைத்து மனிதகுலத்தின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அமைச்சகம் கூறியது.
குறிப்பிட்ட நடவடிக்கைகள் மற்றும் நிறுவன திட்டங்களை பின்னர் அறிவிப்பதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக 2.5 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் மக்காவிற்கு பயணிப்பதைக் காணும் ஹஜ் கடந்த ஆண்டு நவீன வரலாற்றில் முதல் முறையாக குறைக்கப்பட்டது, கோவிட் -19 காரணமாக 1,000 யாத்ரீகர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிதிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.