கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்குள்ளான கப்பலினால் சூழலுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் கண்காணிப்பதற்காக குழு ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் குழு ஒன்று இதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி தகதபுர தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு திசையில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்ட எக்ஸ்-பிரஸ் பெர்ல் என்ற சரக்குக் கப்பல் நேற்று முன்தினம (20) பகலில் தீ விபத்துக்கு உள்ளாகி இருந்தது.
தீயினை கட்டுப்படுத்துவதற்கு கடற்படையினர், உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.