எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதனை அவர் உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நேற்று மனைவிக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து தாமும் பி.சி.ஆர் பரிசோதனை செய்து கொண்டபோது தொற்று உறுதியானதாக சற்று முன்னர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.