மலையகத்தில் தேசிய பாடசாலைகள் உருவாக்கப்பட வேண்டும்!

Date:

அரசின் தேசிய பாடசாலை திட்டம் என்பது பட்டியலில் சேர்ப்பதும் பெயர்மாற்றம் செய்வதுமா? என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலு குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

அரசின் தேசிய பாடசாலை திட்டம் என்பது ஓராண்டுக்கு முன் முன்மொழியப்பட்டது. ஓராண்டு கடந்து, தேசிய பாடசாலைகளாக தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளின் பெயர்கள் வெயிடப்பட்டுள்ளது. அதன்படி, அப்பாடசாலைகளின் பெயர்கள் மாற்றப்பட உள்ளதாக தெரிய வருகின்றது. இதிலிருந்தே அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களின் நிலைமைகளை நன்கு புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.

 

தேசிய பாடசாலையாக அங்கீகரித்து விட்டோம் என்பதன் பொருள் என்ன? மாகாண அரசாங்கத்தின் கீழிருந்த பாடசாலையின், உரித்தும் நிர்வாகமும் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன் பொருள், தேசிய பாடசாலையாக முழுமை மாற்றம் பெற்றுள்ளது என்பது அல்ல. மனிதவள ரீதியாகவும் பௌதீக வள ரீதியாகவும் தேசிய மட்ட பாடசாலை ஒன்றுக்கு சமநிலை பெறுகின்ற போதே தேசிய பாடசாலை மட்டத்தை அடைகின்றது. இதுவே உண்மை நிலை.

 

இங்கு தேசிய பாடசாலைகளாக இப்பாடசாலைகள் மாற்றப்பட வேண்டும், எந்த அடிப்படையில் அவை தேசிய பாடசாலை என்ற மட்டத்திற்கு உயர்த்தப்பட வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது. தற்போது இருக்கின்ற பாடசாலைகளில் வளங்கள் நிறைந்த பாடசாலைகளை, அல்லது பெரிய பாடசாலைகளை தேசிய பாடசாலை என்று பெயரிட்டு விட்டால் அது சரியானதா?

 

அல்லது, தேவையின் அடிப்படையில் சில பாடசாலைகளை தெரிவு செய்து, அவற்றுக்கு அவசியமான மனித, பௌதீக வளங்களை பெற்றுக்கொடுத்து, வளம்நிறைந்த பாடசாலையாக உயர்த்தி, தேசிய பாடசாலை என மாற்றுவது சரியானதா? என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

 

இன்றைய தேசிய பாடசாலை திட்டத்தில் அரசாங்கம் இதில் எதனை செய்ய முற்படுகின்றது என்பது கேள்வியாக எழுகின்றது.

 

மலையகத்தில் தேசிய பாடசாலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் இருக்கின்றோம். அவ்வாறு உருவாக்காப்படுவதை நாம் வரவேற்கின்றோம். ஆனால், அதன் போது எமது அரசியல் பலம் மத்திய அரசில் வலுவாக இருக்க வேண்டும் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் மாகாணத்தில் இருந்து கிடைத்தது கூட, மத்தியில் இருந்து கிடைக்காமல் போய்விடும்.

 

நாம் கடந்த காலத்திலான ஆயிரம் பாடசாலை திட்டம், அதனுடன் தொடர்புபட்டதான மகிந்தோதய தொழில்நுட்ப கூடம் என்பவற்றை மறந்துவிட கூடாது. அதிலே சிக்கி இன்னும் வெளியே வர முடியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கும் பல பாடசாலைகள் உள்ளது. அவற்றில் சில பாடசாலைகள் தொடர்ந்து இயங்குமா என்ற நிலைமை கூட தோன்றி இருக்கின்றது. நடைமுறை கள நிலைமைகள் மற்றும் யதார்த்தத்தை புரிந்துகொண்டு முன்னோக்கி பயணிப்போம்.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...