குருநாகல் மாவட்ட, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவுக்கும் அவருடைய மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில், அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.