பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் மனுவின் விசாரணைகளிலிருந்து விலகினார் நீதியரசர் ஜனக டி சில்வா 

Date:

பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணைகளிலிருந்து விலக்கிக்கொள்வதாக நீதியரசர் ஜனக டி சில்வா இன்று (28) வெள்ளிக்கிழமை மன்றில் அறிவித்தார்.

இரண்டு வருடங்களுக்கு முன் அரங்கேறிய ஈஸ்டர் தற்கொலை தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி  விசாரணை ஆணைக்குழுவின் தலைவராக பணியாற்றியமையினாலேயே இந்த தீர்மானத்தினை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டமை தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் றியாஜ் பதியுதீன் ஆகியோர் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றினை தாக்கல் செய்திருந்தனர்.

மேலும், இது தொடர்பான விசாரணைகள் இன்று (28) வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்ற நீதியரசர்களான விஜித் கே. மலல்கொட, குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஜனக டி சில்வா ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்றது.

இதன்போதே, நீதியரசர் ஜனக டி சில்வா இந்த அறிவிப்பினை மேற்கொண்டார். இதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய நீதியரசர் ஒருவர் நியமிக்கப்படுவார் என மன்றில் தெரிவிக்கப்பட்டது.

Popular

More like this
Related

தேசிய பாதுகாப்பை மீள் உறுதி செய்தலில் நீதித்துறையின் வகிபாகம்.

நேற்றைய தொடர்ச்சி... பகுதி-02 குடும்பக் கட்டமைப்புகள் பல தலைமுறைகளைக் கொண்டதாகவும் சமூக அடிப்படையிலானதாகவும் இருந்தன. மத...

புனித மக்கா மாநகரில் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் மகளின் திருமண ஒப்பந்தம் (நிக்காஹ்)!!

சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓமர் லெப்பே அமீர் அஜ்வத் அவர்களின்...

அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிராக...