எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் இலங்கையர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் ஆபத்து! விஞ்ஞானிகள் தகவல்!

Date:

இலங்கைக் கடற்பரப்பில் பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் உள்ள இரசாயன பொருள் குறித்து சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

துல்லியமான தகவல்கள் கிடைக்கும் வரை இரசாயனத்தின் சரியான விளக்கத்தை கணிப்பது கடினம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் பொது மேலாளர் டாக்டர் டர்னி பிரதீப்குமார கூறுகையில்,

“கப்பலில் இருந்து சிதறடிக்கப்பட்ட இரசாயன சரக்குகளின் மூலம் புற்றுநோய்க்கான ஆபத்து உள்ளது” என்றார்.

“வேதியியல் பொருட்களால் ஏற்படும் நீண்டகால சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து இந்த நேரத்தில் எந்தவொரு திட்டவட்டமான அறிக்கையும் வெளியிட முடியாது” என்று விலங்கியல் மூத்த பேராசிரியர் எம்.பத்மலால் தெரிவித்தார்.

இதற்கிடையில், நேற்று(28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர், வழக்கறிஞர் தர்ஷனி லஹந்தபுர,

“கப்பலால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது வாழ்நாளில் காணக்கூடிய மிகப்பெரிய சேதமாகும்” என்று கூறினார்.

இதேவேளை, கப்பலில் மேலும் எரிபொருள் இருக்கிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்ன தெரிவித்தார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...