அண்மையில் நடைபெற்ற பிரபல அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்க மற்றும் சிங்கள திரைப்பட நடிகை பியூமி ஹன்சமாலி ஏற்பாட்டில் நடைபெற்ற பிறந்தநாள் விருந்துபசாரம் இடம்பெற்ற கொழும்பிலுள்ள 5 நட்சத்திர ஹோட்டலின் சமையற்கலை நிபுணர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்ட 21 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றைய தினம் சந்திமால் ஜயசிங்கவின் தாய், சிங்கள நடிகர் ஜெக்சன் அன்டனியின் மகள் மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.