நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1038 பேர் கைது

Date:

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக 1038 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் அதிகமானோர் குலியாப்பிட்டிய, இரத்தினபுரி மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என போலீஸ் ஊடக பேச்சாளர் பிரதி போலீஸ் அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் இதுவரையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 29,015 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க கூடிய 14 இடங்களில் நேற்றைய தினம் 3,111 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றில் அநாவசியமாக பயணித்த 104 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக போலீஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபர்...

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை...