65,000 ரஷ்யாவின் ஸ்புட்னிக் V கொவிட் தடுப்பூசிகள் இன்று (11) அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அவற்றுள் 15,000 இரண்டாம் டோஸ் தடுப்பூசிகளும் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்,குறித்த இரண்டாம் டோஸை இதற்கு முன்னர் முதலாம் டோஸ் செலுத்திக் கொண்டவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன் ஏனைய 50,000 முதலாம் டோஸ் தடுப்பூசிகளை கண்டி மாவட்ட மக்களுக்கும் வழங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.