இந்தியா முழுவதும் பருவமழை எச்சரிக்கை! எதிர்கொள்ளத் தயாராக இருங்கள் – ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்!

Date:

இந்தியா முழுவதும் பருவமழையை எதிர்கொள்ள ரயில்வே தயாராக இருக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

கனமழை காரணமாக சில ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆய்வு செய்துள்ளார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,

இந்தியா முழுவதும் உள்ள, குறிப்பாக மும்பையில் உள்ள ரயில்வே பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

பருவமழையின்போது மும்பைவாசிகளுக்கு எந்தவிதமான அசௌகரியமும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய ரயில்வே உறுதி பூண்டுள்ளது.

பருவமழையை எதிர்கொள்வதில் ரயில்வேயின் தொழிநுட்ப மற்றும் சிவில் பணிகளின் செயல்திறனை ஆய்வு செய்வதற்காக ஐஐடி மும்பை போன்ற நிறுவனங்களுடன் ரயில்வே துறை கைகோர்க்க வேண்டும்.

ரயிலின் பாதுகாப்பு மற்றும் தடையில்லா இயக்கத்தை உறுதி செய்வதற்காக புதுமைகளும்,கடின உழைப்பும் இணைய வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...