ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் ஊடகங்கள், சிவில் சமூக மற்றும் தனியார் துறையினரின் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஈடுபாட்டின் முக்கியத்துவத்தினை இலங்கை இதில் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையின் குற்றத்தினால் பெறப்பட்ட சொத்துக்கள் வரைவுச் சட்டமானது நாட்டின் ஊழலுக்கு எதிரான செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் என உறுதியளித்துள்ளது.
ஊழலினூடாக திருடப்பட்ட சொத்துக்களின் பாதுகாப்பான புகலிடங்களை அகற்றுவதற்கும் அவற்றை திருப்பி அனுப்புவதற்கும் சர்வதேச ஒத்துழைப்பு அவசியம். குற்றச் செயல்களினால் பெறப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டத்தினை துரிதப்படுத்தி அதனூடாக பொது கொள்முதல் மற்றும் இறுதிப் பயனடையும் உரிமம் கொண்ட கம்பனிகளின் வெளிப்படைத்தன்மையினை வலுப்படுத்த உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என TISL மீளவும் வலியுறுத்தியுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு
https://bit.ly/3xg4eHL
