நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட கொட்டராமுல்லை கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தேவையான உலர் உணவுப் பொதிகளை ஊர் தனவந்தர்களின் உதவியுடன் நிர்வாகசபையினால் இன்று (12) ஆம் திகதி அனைத்து வீடுகளுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும், இந்த நிகழ்ச்சித் திட்டத்தை பள்ளி நிர்வாக சபை உறுப்பினர்கள், ஊர் மக்கள் மற்றும் கொட்டராமுல்லை பகுதியில் இயங்கும் அனைத்து கழக அங்கத்தவர்களும் இணைந்து வெற்றிகரமாக நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.