திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்ட கொலன்னாவை நகர சபை உறுப்பினர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் இன்று (16) பிற்பகல் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான மீதொட்டுமுல்ல பகுதியில் உள்ள களஞ்சியசாலையில் இருந்த இயந்திரம் ஒன்றை திருடியமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த இயந்திரத்தை கொள்வனவு செய்த இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.