தந்தையர் தினத்தன்று உசேன் போல்ட் தம்பதியரின் இன்ஸ்டாகிராம் பதிவு

Date:

ஒலிம்பிக் வரலாற்றில் அதிசிறந்த குறுந்தூர ஓட்ட வீரரரும் உலக சாதனை நாயகனுமான உஸைன் போல்ட் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தந்தையானார்.

தங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்ததை உஸைன்போல்ட்டும் அவரது மனைவி கெசி பெனெட்டும் அறிவித்துள்ளனர்.

தந்தையர் தினமான ஞாயிறன்று இந்தத் தகவலை குழந்தைகளுடனான குடும்பப் படத்துடன் தனது குடுவிட்டர் பக்கத்தில் உஸைன் போல்ட் பதிவிட்டிருந்தார்.

தங்களது இரட்டைக் குழந்தைகளுக்கு தண்டர் போல்ட் மற்றும் சென். லியோ போல்ட் என பெயரிட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

உஸைன் போல்டுக்கும் கெசி பெனட்டுக்கும் கடந்த வருடம் மே மாதம் பிறந்த பெண் குழந்தைக்கு ஒரு மாதம் கழித்து ஒலிம்பியா லைட்னிங் என பெயர் சூட்டினர்.

2008, 2012, 2016 ஆகிய மூன்று ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களில் பங்குபற்றிய உஸைன் போல்ட் மொத்தமாக 8 தங்கப் பதக்கங்களை சுவீகரித்துள்ளார்.

உலகின் அதி வேக மனிதன் என புகழப்படும் போல்ட், ஆண்களுக்கான 100 மீற்றர் (9.58 செக்), 200 மீற்றர் (19.19 செக்) ஆகிய ஓட்டப் போட்டிகளில் உலக சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். இவர் 2009 ஆண்டு பேர்லினில் இந்த இரண்டு உலக சாதனைகளையும் 4 நாள் இடைவெளியில் நிலைநாட்டியிருந்தார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...