ஐரோப்பிய ஒன்றியத்தினால் பேர்ள் கப்பலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரகால நிவாரணம்!

Date:

இலங்கையின் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலையடுத்து கடற்சூழல் பெருமளவிற்கு மாசடைந்திருப்பதுடன் அதன் காரணமாக கடல்வாழ் உயிரினங்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை சீர்செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம் 200,000 யூரோ நிதியை அவசரகால நிவாரணமாக இலங்கைக்கு வழங்கியுள்ளது.

 

இந்த உதவி கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பேரழிவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள 15,000 பேருக்கு பயனளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மீன்பிடி சமூகம் உள்ளடங்கலாக குறித்த அனர்த்தத்தினால் பாதிப்படைந்த தரப்பினருக்கு அவசியமான உதவிகளை வழங்கிவரும் செஞ்சிலுவைச்சங்கத்திற்கு இந்த நிதியுதவியானது பாரிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலைத் தொடர்ந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டமையால் தமது வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு இது உதவியாக அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அதேவேளை, கப்பலின் பாகங்கள் மற்றும் அதில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் என்பன தொடர்ந்து கரையொதுங்கிவரும் நிலையில், அவற்றை சுத்தம்செய்வதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதையும் இந்த நிதியுதவி பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

 

இதனூடாக கடற்பிராந்திய சுத்திகரிப்புப்பணிகளில் ஈடுபட்டிருக்கும் தன்னார்வலர்களுக்கு அவசியமான பாதுகாப்பு அங்கிகளையும் உபரணங்களையும் பெற்றுக்கொடுக்க முடியும்.

 

கப்பல் அனர்த்தத்தினால் வாழ்வாதாரங்களை இழந்த குடும்பங்களுக்கான நிதியனுசரணைகளை வழங்குபோது பெண்தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் விசேட தேவையுடையோர் உள்ள குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

 

பெருமளவான இரசாயனப்பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பதார்த்தங்களை ஏற்றிவந்த எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடந்த மாதம் 20 ஆம் திகதி கொழும்புத்துறைமுகத்திற்கு அண்மையில் தீப்பரவலுக்குள்ளானது.

 

அதன் விளைவாக மிகமோசமான கடற்சூழல் அழிவு என்று கருதத்தக்க அனர்த்தத்தை தற்போது இலங்கை எதிர்கொண்டிருக்கிறது என்று ஐரோப்பிய ஒன்றியைம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

 

சுமார் 12 நாட்கள் வரை தொடர்ந்த தீப்பரவலின் காரணமாக கப்பலில் வைக்கப்பட்டிருந்த கொள்கலன்களுக்குப் பாரிய சேதம் ஏற்பட்டதுடன் அதிலிருந்த பிளாஸ்டிக் சிறுதுணிக்கைகள், இரசாயனப்பதார்த்தங்கள் என்பன கடற்சூழலில் கலந்ததையடுத்து பாரிய சூழல் மாசடைவு ஏற்பட்டுள்ளது என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...