எதிர்வரும் ஜுலை மாதம் 6 ஆம் திகதி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் தற்போது 27 அமைச்சர்கள் உள்ளமையினால் மற்றுமொரு அமைச்சர் பதவி பிரமாணம் செய்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய நியமனத்திற்கு வழி வகுக்க டாக்டர் ரஞ்சித் பண்டாரா பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்வார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கடந்த மே மாதம் இரண்டாம் வாரம் அமெரிக்கா சென்றிருந்த பசில் ராஜபக்ஷா எரிபொருள் விலையேற்ற பிரச்சினைகளுக்கு மத்தியில் நேற்று (24.06.2021) நாடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.