எம்.எஸ்.சி. மெசீனா கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலால் கடல் பிராந்தியத்திற்கு பாதிப்பு ஏற்படாது!

Date:

கிரிந்தை மஹா இராவணன் கலங்கரை விளக்கத்தில் இருந்து கிழக்கு திசையில் 480 கடல்மைல்களுக்கு அப்பால், எம்.எஸ்.சி.மெசீனா என்ற கொள்கலன் கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளமையால், நாட்டின் கடல் பிராந்தியத்திற்கு பாதிப்பு ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவரான சட்டத்தரணி, தர்ஷனி லஹந்தபுர இதனைத் தெரிவித்துள்ளார்.

 

தீப்பற்றியுள்ள கப்பலுக்கு அண்மையில் பயணித்த வர்த்தக கப்பல் ஒன்று நேற்று, அதற்கு அருகில் அனுப்பப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.

 

கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் கொழும்பு துறைமுகத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்த இந்த கப்பல், சர்வதேச கடல் எல்லையில் தீப்பற்றியுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

 

எனினும், அது இலங்கையின் மீட்பு வலயத்துடன் தொடர்புடையது என்பதனால், தற்போதைய கடல் வலயம் குறித்து, அனைத்து துறைகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...