குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அஸ்ட்ரா செனகா தடுப்பூசி தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் பொதுமுகாமையாளரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து இவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்று(26) அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.