மடிவெலயில் கொழும்பு பறவைகள் பூங்கா திட்டத்தை நகர அபிவிருத்தி அமைச்சர் நலகா கோடஹேவா நேற்று (28) ஆரம்பித்து வைத்தார்.
மேலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், இலங்கையின் சுற்றுலாத் துறையை புதுப்பிக்கவும் 39 ஏக்கர் பறவைகள் பூங்கா மடிவெலயில் உருவாக்கப்படும்.
மேலும், மடிவெல பகுதியில் உள்ள ஒரு ஈரநிலத்தை பறவைகள் பூங்காவாக மாற்ற பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இந்த திட்டத்திற்கு ரூ. 1.51 பில்லியன் செலவிடவும், இது அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் எனவும் எதிபார்க்கப்படுகிறது.
இந்த திட்டம் கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கிய அரசாங்கத்தின் அழகுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.பிரதமரின் உத்தரவின் பேரில், கொழும்புக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இயற்கை தொடர்பான பல திட்டங்கள் தொடங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.