இதுவரை 176 கடலாமைகள் உயிரிழப்பு – சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு!

Date:

எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக இதுவரை 20 திமிங்கிலங்கள், 4 சுறாக்கள் மற்றும் 176 கடலாமைகள் உயிரிழந்து கரை ஒதுங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இதனை அறிவித்துள்ளதாக அததெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

கப்பல் தீப்பற்றி எரிந்த சம்பவத்துடன் தொடர்புடைய முறைப்பாடு இன்று கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துச் கொள்ளப்பட்ட போது குற்றப்புலானாய்வுத் திணைக்களம் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் நாயகம் மாதவ தென்னகோன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த மரணங்கள் மழை காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என சிலர் கூறியிருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என அரச பிரதி சொலிசிட்டர் நாயகம் தெரிவித்தார்.

குறித்த இறப்புக்கள் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றி எரிந்ததன் ஊடாக ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக இடம்பெற்றுள்ளதாக கடல் மாசு தடுப்பு அதிகார சபையினால் நியமிக்கப்பட்ட 39 பேர் அடங்கிய குழுவினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விலங்குகளின் மரணங்கள் தொடர்பில் நாடு பூராகவும் உள்ள 26 நீதிமன்றங்களில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் குறித்த விலங்குகளின் உடல் பாகங்கள் பரிசோதனைக்காக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும பிரதி சொலிசிட்டர் நாயகம் அறிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ரயில்வே பொது மேலாளரை பதவி நீக்க அமைச்சரவை அனுமதி

ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தரவை அந்தப் பதவியில் இருந்து நீக்க...

நாட்டில் சில பகுதிகளில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்

இன்றையதினம் (12) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

முஸ்லிம்களின் உலகத்துக்கு மணிமகுடமாக இருப்பது பலஸ்தீனம்.அதை விட்டுவிடாதீர்கள்”: அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு!

காசாவில் இப்போது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவை முழுமையாகக் கட்டுப்படுத்த...

கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (EASCCA )மாநாட்டு மண்டபம் ஏறாவூரில் திறந்து வைப்பு!

ஏறாவூரில் அமையப் பெற்றுள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் EASCCA மாநாட்டு...