இன்று முதல் நாட்டின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

Date:

இலங்கையில் தென்மேற்கு பகுதியில் காணப்படும் மழை நிலைமை இன்று தொடக்கம் (ஜூலை 01 ஆம் திகதி) சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 75மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

Popular

More like this
Related

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணி இரங்கல்

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் போலி அழைப்புகள்!

தனிநபர் விபரங்களைப் பெற்று நிதி மோசடி செய்யும் நோக்கில், குறிப்பிட்ட சில...

ருஹுனு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக ஜயசிங்கவின் தந்தை காலமானார்

ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிங்கள ஆய்வுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக...

900 பேருக்கு மருத்துவ சேவை: பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்க MFCD மற்றும் ஜப்பான் நிறுவனங்களின் கூட்டு முயற்சி

'டிட்வா'   புயலினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காக நடத்தப்பட்ட இறுதி கட்ட தொற்றா நோய்கள்...