நேற்றைய தினம் 170,995 பேருக்கு கோவிட் தடுப்பூசிகள்

Date:

நேற்றைய தினம் (30) 170,995 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், நாள் ஒன்றுக்கு செலுத்தப்பட்ட அதிகப்படியான சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் நேற்றைய தினம் நாட்டில் பதிவாகி உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

மேலும் இவற்றில் 91,759 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸும் 79,236 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் போடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நேற்றைய தினம் 2,523 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் 2 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...