நாட்டில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டை முற்றிலுமாக அகற்ற முடியாது | சுற்றாடல் அமைச்சின் செயலாளர்

Date:

நாட்டில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டை முற்றிலுமாக அகற்ற முடியாது என சுற்றாடல் அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

ஆனால் அவற்றின் பயன்பாட்டைக் குறைக்க சில திட்டங்களை செயற்படுத்துவதன் மூலம்  செய்ய முடியும் என அவர் தெரிவித்தார்.அதன்படி, அத்தியாவசியமான ஆனால் மாற்று பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் தயாரிப்புகளை தடைசெய்யும் பல அமைச்சரவை ஆவணங்களை அமைச்சர் மஹிந்த அமரவீர முன்வைக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், இது குறைத்தல்-மறுசுழற்சி- மறுபயன்பாடு ஆகியவற்றைக் குறிக்கிறது. இது பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டைக் குறைக்க உதவுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார். பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பொருட்களை விற்க மூன்று மாத கால அவகாசம் அளித்துள்ளதாகவும் ஆனால், இதுபோன்ற சலுகைகளை மீண்டும் மீண்டும் வழங்க தயாராக இல்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.

சுற்றுச்சூழல் மற்றும் நமது நாட்டின் மனித ஆரோக்கியத்தை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...