நுவரெலியா நகரின் ஹாவாஹெலிய பிரதேசத்தில் அமைந்துள்ள குழந்தைகள் காப்பகம் ஒன்றில் 45 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த காப்பகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் குழந்தைகள் காப்பகத்தில் இருந்த 37 சிறுவர்களுக்கும் மற்றும் குறித்த காப்பகத்தின் ஊழியர்கள் 8 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.