ஹெய்ட்டி ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸ் அடையாளம் தெரியாதவர்களால் அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
அந்நாட்டு பிரதமர் க்லோட் ஜோசப் இதனை தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸ் ஆயுதக் குழு ஒன்றால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
காயமடைந்த மொய்ஸின் மனைவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.