இலங்கை அணியின் பயிற்சி ஊழியர்களில் மற்றொரு உறுப்பினருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் விளையாட்டு செயற்திறன் ஆய்வாளர் தனுஜ நிரோஷ் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை கிரிக்கெட் அணியில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்குப் பிறகு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் இவர். முன்னதாக, இலங்கையின் பேட்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
சுற்றுப்பயணத்தில் இருந்த அனைத்து வீரர்கள் மற்றும் பணியாளர்கள் அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை கடுமையான தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
Sri Lanka Cricket team Performance Analysis Thanuja Niroshan Tested Positive for #Covid19 #SLvIND pic.twitter.com/TH1MHBRXV5
— DANUSHKA ARAVINDA (@DanuskaAravinda) July 9, 2021