இம்மாதம் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருந்த ஶ்ரீ லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை எதிர்வரும் நவம்பர் மாதம் வரை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போதைய கொவிட் பரவல் நிலைமை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நவம்பர் மாதம் 19 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை ஶ்ரீ லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை நடாத்த இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.