நாட்டில் மேலும் 1,507 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில், 1,492 பேர் புத்தாண்டு கொத்தணியில் பதிவாகியுள்ள நிலையில், 15 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி இலங்கையில் மொத்த கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை 274,538ஆக அதிகரித்துள்ளது.