அரசாங்கத்தின் சட்ட விதிமுறைகள் துஷ்பிரயோகமானது நாட்டின் மீதான பொருளாதார தடைக்கு வழிவகுத்திருக்கின்றது-நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் காட்டம்!

Date:

அரசாங்கம் சட்ட விதிமுறைகளை துஷ்பிரயோகம் செய்வது நாட்டை வேறொரு விதமாக பாதித்திருக்கின்றது. அது ஐரோப்பிய ஒன்றியம் சுற்றி வளைத்து, இலங்கையின் மீதான பொருளாதார தடையை கொண்டு வருவதற்கு வழிவகுத்திருக்கின்றது. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்போர் மீதான சில நடவடிக்கைகளின் விளைவாக இவ்வாறான விபரீதம் ஏற்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை (திருத்த) சட்டமூலம், சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றிற்கு எதிரான சமவாயம் (திருத்தம்) சட்டமூலம், குற்றவியல் நடவடிக்கை சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான ஒரு கட்டளை மற்றும் காணாமற் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...