மன்னாரில் மூன்று கத்தோலிக்க சிற்றாலய சொரூபங்கள் மீது தாக்குதல்

Date:

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூன்று இடங்களில் அமைந்துள்ள கத்தோலிக்க சிற்றாலய சொரூபங்கள் மீது  இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார் வயல் வீதி பகுதியில் காணப்படுகின்ற இரு சொரூபங்களும் மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் அமைக்கப்பட்ட சொரூபம் ஒன்றும் உள்ளடங்கலாக மூன்று சொரூபங்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று புதன் 14 கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் போது குறித்த சொரூபங்கள் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி கூடு உடைந்து சேதமாகி உள்ளது. குறித்த விடயம் தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்ட நிலையில் மன்னார் பொலிஸார் மற்றும் ‘சோகோ’ பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதே நேரம் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை அதிகாலை மேலும் மூன்று சிற்றாலங்கள் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் கடந்த மூன்று தினங்களில் 6 கத்தோலிக்க சிற்றாலயங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...