இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி!

Date:

இங்கிலாந்துக்கு எதிரான முதல் T20 போட்டியில், 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை, பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இரண்டாம் தர இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

 

கொரோனா பாதிப்பு காரணமாக இயன் மோர்கன் தலைமையிலான அணியினர் தனிமைப்படுத்தப்பட்டதால் 2ம் தர அணி களம் இறங்கியது.

 

இந்த நிலையில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரில் முதலாவது சுற்று கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நேற்று நடைபெற்றது.

 

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 232 ஓட்டங்களைக் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் தலைவர் பாபர் அசாம் 49 பந்துகளில் 85 ஓட்டங்களும், முகமத் ரிஸ்வான் 41 பந்துகளில் 63 ஓட்டங்களும் எடுத்தனர்.

 

கடின இலக்கை நோக்கி துடுப்பாடிய இங்கிலாந்து அணியின் லியாம் லிவிங்ஸ்டோன் அதிரடியாக விளையாடி 43. பந்துகளில் 103 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். இருந்தபோதும் இங்கிலாந்து அணி 19.2 ஒவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 201 ஓட்டங்களை மட்டுமே எடுத்து இப்போட்டியில் தோல்வியடைந்தது.

 

பாகிஸ்தான் அணியின் சார்பில் ஷாதப் கான் மற்றும் ஷகின் அப்ரிதி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற புள்ளிக்கணக்கில் பாகிஸ்தான் அணி முன்னிலை பெற்றுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...