கஹடகஸ்திஹிலிய கொக்மடுவ பகுதியில் காட்டுயானையின் தாக்குதலுக்குள்ளான இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.சம்பவத்தில் 57 மற்றும் 65 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர்.
இன்று முற்பகல் குறித்த கிராமத்தின் வயல் பகுதிக்குள் காட்டுயானை உட்புகுந்துள்ளது.
இதனையடுத்து பிரதேசவாசிகளுடன் இணைந்து காட்டு யானையை விரட்டுவதற்கு முயற்சித்த போதே, இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.