ஜெர்மனி, பெல்ஜியத்தில் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக உயர்வடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஜெர்மனியின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வெள்ளப்பெருக்கில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளது.
ஜெர்மனியில் 133 பேரும், பெல்ஜியத்தில் 24 பேரும் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலரை காணவில்லை என்பதால், உயிரிழப்பு மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.