உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்த போதிலும் நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயுவின் விலை தொடர்பில் வர்த்தக அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டது, எனினும் இலங்கை அரசு அந்த சுமையை நுகர்வோர் மீது திணிக்காது என வர்த்தக அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன் நிதி அமைச்சுடன் இணைந்து சமையல் எரிவாயுவின் விலையை முறையாக கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.