மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல்மீண்டும் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்.
மேலும், முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் போக்குவரத்துக்கள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் கூறுகின்றார்.
கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நோக்கில், மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.