இதுவரையில் இலங்கைக்கு 1 கோடியே 21 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட கொவிட் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அவற்றுள் நூற்றுக்கு 72 சதவீதமானவை அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்டவை என தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் 80 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளும், 5 இலட்சம் எக்ஸ்டரா செனகா தடுப்பூசிகளும், 180,000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகளும் மற்றும் 115,830 பைஸர் தடுப்பூசிகளையும் அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதற்காக இலங்கை ரூபாவில் 1,546 கோடி செலவழித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் சீனாவிடம் இருந்து 16 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் அன்பளிப்பாக கிடைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.