எதிர் வரும் (முஹர்ரம்-1) ஆகஸ்ட்-10 முதல் அனைத்து நாட்டவருக்கும் உம்ரா கடமைகளை நிறைவேற்ற சவூதி அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அனைத்து நாடுகளினதும் விமானங்களை நேரடியாக அனுப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது.
9 நாடுகளான,இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, எகிப்து, துருக்கி, அர்ஜென்டினா, பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் லெபனான் ஆகிய நாட்டவர்கள் உம்ராவிற்கு வருவதற்கு முன்னர் தங்கள் நாட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருப்பது அவசியமாகும்.
ஃபைசர், மொர்டெனா, அஸ்ட்ராஜெனெகா அல்லது ஜே & ஜே ஆகிய தடுப்பூசிகளின் முழுமையான டோஸ் அளவுகளுடன் COVID-19 செலுத்த வேண்டும் என்பது கட்டாயத் தேவையாகும்.
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் அத்தோடு
சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட உம்ரா முகவர் வழியாக மாத்திரமே வர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.